தேசிய மூத்தோர் தடகள சங்க அங்கீகாரம் வழங்கவேண்டும்.திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம்.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர்கள் ராமசாமி, சிவகிருபா, இணைச் செயலாளர்கள் மைக்கேல், பார்த்திபன், நல்லுசாமி அண்ணாவி, மதியன் வெங்கடேசன்,கமிட்டி நிர்வாகிகள் சுந்தர், ராஜசேகரன் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேசிய மூத்தோர் தடகள சங்கம் அங்கீகாரம் வழங்கவேண்டும்,அதற்கு நாம் தீவிரமாக பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற்றது.

