Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. எப்படி பொருந்தி வராது என்பதை முதல்வர் விளக்குவார்.திருச்சியில் திருமாவளவன் பேட்டி.

0

'- Advertisement -

உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது

திருச்சியில் தொல். திருமாவளவன் எம்பி பேட்டி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.

பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும்.சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும் பணி கிடப்பில் உள்ளது.

இது அமைப்பிற்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட் டு வருகின்றனர். தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்தி தரவேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை, அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டமானது தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என சுருக்கி பார்க்க தேவையில்லை உள்நோக்கம் எதுவுமில்லை.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. திமுக கூட்டணியில் தான் காங்கிரஸும் உள்ளது.திமுக கூட்டணி கட்டுக்கொப்பாக உள்ளது.

மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் கோரிக்கை இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை மாநாட்டிலே வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம்.

அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன்.

இளைய தலைமுறை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு முற்றராக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுவிற்கு 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுத்த தொகையை மக்கள் செலுத்தவில்லை என கூறுகிறீர்கள்

இது குறித்து அரசு தான் கவலைப்பட வேண்டும். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும் கேட்பதால் கூட்டணி உடையாது. உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது.தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்குவார்.

எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது.

நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம்.திமுக கூட்டணியில் பிரச்சனை இல்லை .இவ்வாறு தொல். திருமாவளவன் எம்பி கூறினார்.

முன்னதாக திருச்சி வந்த தொல். திருமாவளவன் எம்பியை திருச்சி மண்டல செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், சக்தி ஆற்றலரசு வழக்கறிஞர் கலைச்செல்வன்,கனியமுதன், திலீபன் ரமேஷ், வழக்கறிஞர் ரமேஷ், சங்கர் முன்னால் மண்டல செயலாளர் தமிழ்நாதன் பெரம்பலூர் நாடாளுமன்ற செயலாளர் கெட்டு மண்டல செயலாளர் பிரபாகரன் துணை மண்டல செயலாளர் அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.