Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருணை நெஞ்சம் கொண்ட காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி

0

கருணை கொஞ்சும் காக்கி நெஞ்சம் கொண்ட G5 காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி

“காவல்துறை பணியை வேலையா மட்டும் பார்க்கவில்லை.
என்னோட அடையாளமாகவும் மக்களுக்காகப் பணி செய்ய கிடைத்த வாய்ப்பாகவும் பார்க்கிறேன்.
வேலைக்குச் சேர்ந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாள் சீருடை உடுத்தும்போதும், முதல் நாள் இருந்த அதே ஆர்ப்பரிப்பு மனதுக்குள் வந்து போகிறது” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் காவல் நிலைய ஆய்வாளர் இராஜேஸ்வரி.

கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலகக் காலனியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர் தன்னுடைய சக பணியாளர்களுடன் இணைந்து கொரோனா நேரத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இன்ஸ்பெக்டர் இராஜேஸ்வரி
இதுவும் ஒரு வகையான கடமைதான். சீருடை போட்டுக்கொண்டு மக்களுக்குச் செய்யும் எந்த நல்ல விஷயமும் என்னைப் பொறுத்தவரை கடமைதான். எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ அதே அளவுக்கு மனிதநேயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

காவல் துறை உங்கள் நண்பன் என்று வார்த்தையில் மட்டுமில்லை செயலிலும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் என்று கூறினார்.

கொரோனாவுக்கு முன் சிறு சிறு உதவிகளை மக்களுக்குச் செய்துகொண்டு இருந்தேன்.

ஒருத்தரை ஒருத்தர் தொடகூட பயப்படும் இந்தச் சூழலிலும் உதவிகள் செய்வதால் நிறைய மக்களால் பேசப்படுகிறது.
மக்கள் எங்களைப் பாராட்ட வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. எங்களோட பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும்.

எனது சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம்.சிறு வயதிலேயே குடும்பத்துடன் சென்னைக்கு வந்துவிட்டோம். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் எம்.ஏ வரலாறு படித்துவந்தார்.

அப்பா காவல்துறையில் வேலை பார்த்து ஒய்வுபெற்றவர்.
அதனால் சிறு வயதிலிருந்தே மிக தைரியமாக வளர்த்து வந்தார்கள்.
பேன்ட் – சர்ட், பாய் கட் இதுதான் அப்பல்லாம் என்னுடைய அடையாளம்.

இன்ஸ்பெக்டர் இராஜேஸ்வரி
அப்பாவை மிடுக்கான தோற்றத்தில் பார்த்தே வளர்ந்ததால், போலீஸ் வேலை எனக்கும் கனவாக மாறிவிட்டது.

1991 காவல் துறையில் சேர்ந்தேன். முதன்முதலாக வேலைக்குப் போகும்பொழுது, ‘நீ போட்டிருக்கும் உடுப்புக்கு எப்பவும் நேர்மையா இரு. எந்த சூழ்நிலையிலும் மனிதாபிமானத்தை மீறி நடந்துக்காதே என்று அப்பா சொன்னாங்க. உயிர் இருக்கின்றவரை இதைக் கண்டிப்பா கடைப்பிடிப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எங்களோட இந்த போலீஸ் உடைக்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் கிடையாது.

பாலினம் கடந்த வீரத்தை இந்த சீருடை தான் கொடுக்குது. சீருடை அணியும் அடுத்த நிமிடமே நான் ஒரு பெண் என்பதை மறந்து தைரியம் வந்துவிடும்” என்றார் காவல் நிலைய ஆய்வாளர் இராஜேஸ்வரி. மக்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“நான் சந்திக்கும் மக்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அதை மனத்திருப்திக்காக செய்துகொண்டு இருக்கிறேன் என்று கூறினார். என்னைப் பார்த்து என் காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற நண்பர்களும் உதவ ஆரம்பித்தார்கள்.

ஒருத்தருக்கு உதவி செய்வது என்பது அந்த நேரப் பிரச்னைக்கு தீர்வாக இல்லாமல், அந்தப் பிரச்னையில் இருந்து அவர்களை முழுமையாக வெளியே கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

தீக்குளித்த ஒரு பெண்ணோட வழக்கு எங்கள் காவல் நிலையத்திற்கு வந்தது. அந்த பெண்ணை காப்பாற்றி, செலவுக்குப் பணம் கொடுத்து தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கவுன்சலிங் கொடுத்து, குடும்பதுடன் சேர்த்துவைத்தோம். அந்த பெண்ணுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்தோம்.

மக்களின் நலனுக்காக இதுபோன்று சிறு சிறு விஷயங்களை செய்துகொண்டு
இருக்கிறோம்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
கொரோனா சூழலில் இன்னும் அதிகமான மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. கொரோனா மக்களோட வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிவிட்டது.

தினமும் எத்தனையோ பேர் சாப்பாட்டுக்காக கஷ்டபடுகிறார்கள். பசியில இருக்கும் எல்லோருக்கும் உதவ முடியவில்லை என்றாலும்,

சந்திக்கிறவர்களுக்கு உதவி செய்துகொண்டு இருக்கிறோம். நான் பணிபுரியும் ஸ்டேஷன்ல 37 காவல்துறை நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் ஓட்டேரியில் வயதான அம்மா இறந்துவிட்டார்கள். அங்கே இருந்த மக்கள், இறந்தவங்க பக்கத்தில் போக பயந்தார்கள்.
நாங்கள் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்தோம்.

கொரோனா குறித்த பயம் இருந்தாலும், முழுமையான பாதுகாப்போடு, கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் அழைத்து போவது, தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்த ஆதரவற்றவர்களை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தம் செய்து காப்பகங்களில் சேர்ப்பது, தேவைப்படுபவர்களுக்கு அரிசி, உணவுப்பொட்டலங்கள் வழங்குவது, மாஸ்க், சானிட்டைசர் வழங்கி கொரோனா விழிப்புணர்வு கொடுப்பது என்று நான்கு மாதமாக நேரம் காலம் பார்க்காமல் எங்க குழு பணி செய்கிறது. எங்கள் துறையிலிருந்து முழு ஆதரவு இருக்கிறதால் தான் இது சாத்தியமாகிறது.

நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கறதால் தான் இன்னும் அதிகமாக ஊக்கத்துடன் பணி சிறப்பாக செய்ய முடிகிறது என்று சொன்னர் காவல் நிலைய ஆய்வாளர் இராஜேஸ்வரி.

நிறைவாக அவர் கூறியது அரசுப் பணியிலிருப்பவர்கள் அனைவருமே நெஞ்சில் ஏற்றிக்கொள்ள வேண்டிய ஒன்று… சமுதாயத்தில் நம்மால் ஒரு சிறிது மாற்றம் நிகழ்ந்தாலும் அது சந்தோஷம்தான்.
இந்த உடை உடுத்தியது மக்களுக்காக,
மக்களின் நலன் காக்க.
இந்தப்பணி தொடர வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.