பள்ளியின் தரத்தை உயர்த்த கோரி 5ம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு கடிதம் எதிரொலி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
துறையூர் உப்பிலியபுரம் கல்வி வட்டாரம் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு (வெங்கடேஷன் மக்கள் சக்தி இயக்கம், மகன்) மாணவர் மகாபதஞ்சலி.
இம் மாணவர் எமது பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் செய்து தரவும், பள்ளியை தரம் உயர்த்தி தரவும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மூலம் செய்தி வெளியே வந்த காரணத்தினால் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொப்பம்பட்டி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாணவர் மகா பதஞ்சலியின் அண்ணன் நித்திபன் ஆகியோர் அமைச்சரிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10 ஆயிரத்தை வழங்கினர்கள் .
(இவர்களுக்கு மக்கள் சக்தி இயக்க சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.)
இவர்கள் எங்கள் பள்ளியை அனைவருக்கும் வெளி உலகத்திற்கு தெரியும்படி செய்ய திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்திற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்கள்.