தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் ரூ. 3.25 லட்சம் நிதி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை சார்பாக தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் மறைந்த இயக்க உறுப்பினர்களின் 5 குடும்பங்களுக்கு தலா ரூ. 25000 வீதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில், மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ், மாவட்ட பொருளாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிராஜுதீன், சரவணன், சுரேஷ் ராஜ், மணிபாரதி, வட்டாரச் செயலாளர்கள் அமல்சேகராஜ், அந்தோணிராஜ், தேவகி, சுகுமார் ராமகிருஷ்ணன், கென்னடி, சிவகுமார், செந்தில்குமார், சேகர், ஜோசப் தனராஜ், கோபாலகிருஷ்ணன், சண்முகம், மார்டின்

மற்றும் மாவட்ட துணை பொறுப்பாளர்கள், கரூர் மாவட்ட தலைவர் பொன்னம்பலம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அமல்ராஜ், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், கரூர் மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலையும் தமிழக முதலமைச்சர் இடம் வலியுறுத்தி பெற்றுத் தர பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது