Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சியில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம்.

0

'- Advertisement -

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் 44 பேரை இடமாற்றம் செய்து திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேக்குடி, பெரிய கருப்பு, போதாவூர், திருச்செந்தூரை

மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சி குறிச்சி, நாகமங்கலம், சேதுராப்பட்டி, புங்கனூர், தாயனூர், மற்றும்

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் கத்தாழை பேட்டை வாழவந்தான் கோட்டை,மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவுவிட்டுள்ளார்.

ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 14 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.