Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

Ad banner

கடந்த மாதம் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வடமாநில நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் அடையாளம் தெரியாத நபரிடம் மூன்று லட்சம் கைமாற்றியதாகவும் வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நமது திருச்சி காந்தி மார்க்கெட்டில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன.

 

எனவே வியாபாரிகள்,பணியாட்கள் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு கூலித்தொழிலாளி நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் அல்லது உரிமையாளர்கள் தரும் தினசரி சம்பளத்தில் கள்ளநோட்டுகள் இருந்தால் அவர் அன்றைய குடும்ப செலவுக்கு என்ன செய்வார். எனவே நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் ரூபாய் நோட்டுகளை பார்த்து வாங்க வேண்டும் என

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தனது விழிப்புணர்வு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.