விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி.ஆதாரங்களுடன் எடுத்துக் கூறிய திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார்.
அஇதிமுக பொதுச்செயலாளரும்,முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்.
விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு
விடியா திமுக ஆட்சிக்கு எதிராக,
“விடியா ஆட்சி உங்கள்
வீட்டு பில்லே சாட்சி”
என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வு திருவரம்பூர் பகுதிக்கு உட்பட்ட 39 ஏ வட்டத்தில் பாலாஜி நகர் ( மான் போர்ட் பள்ளி அருகில்) நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள்.. பங்கேற்று விடியா ஆட்சியில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை விளக்கி கூறினார்.

இந்த நிகழ்வில் பகுதி செயலாளர்கள் பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், முருகானந்தம், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன், வட்ட செயலாளர்கள் யோகானந்தம், காட்டூர் மணி, அபிமன்யு, முத்துக்குமார், வெங்கடேசன், ஒரந்தை ஜெயராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோபிநாத், மனோகர், மணவை செல்வராஜ், ரபீக், ரயில்வே குமார், மற்றும் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

