ரூ.2500 + ரூ.1500 = ரூ.5000 தராமல் வெறும் ரூ.3000 அறிவித்துள்ளது ஏன் முதல்வரே ?தமிழக முதல்வருக்கு அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் குமார் கேள்வி.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் பொருட்கள் மற்றும் பணமும் வழங்கி வருகிறது.

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க ஸ்டாலின் தற்போது வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் பணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் விழாவிற்காக ரூ.3000 அறிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பகுமார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலிடம் கேள்வி கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020 டிசம்பர் மாதம் அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலையில் அதிமுகவை நிராகரிப்போம் என்று பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் “அதிமுக அரசு பொங்கலுக்காக 2,500 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் அதை வரவேற்கிறோம். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்போதே வரவேற்றிருக்கிறோம். நாங்கள் 5,000 கொடுங்கள் என்று கூறினோம். ஆனால், அதிமுக 2,500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
அந்த 5,000-க்கு இன்னும் எவ்வளவு மிச்சம் இருக்கிறது? 1,500 ரூபாய் இருக்கிறது. அதனால், அந்த 1,500 ரூபாயையும் சேர்த்து கொடுங்கள் என்றுதான் கூறுகிறோம் அப்போது ரூ.5000 தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது தனது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் பொறுப்பேற்ற பின்னர் 2022 ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருத்த மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த (2026 ) ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து ரூ.5000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ரூ.3000 மட்டும் அறிவித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏன் தமிழக முதல்வரே 2021 ல் எங்கள் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.2500 வழங்கியபோது ரூ.2500+ ரூ.1500 சேர்த்து ரூ.5000 வழங்க வேண்டியது தானே என கேட்ட முதல்வரே நீங்கள் கடந்த நான்காண்டு ஆட்சியில் எப்போதாவது பொங்கல் விழாவிற்கு ரூபாய் 5000 வழங்கினீர்களா.? 4 ஆண்டுகளாக செய்யாத நீங்கள் இந்த வருடமாவது ரூ.5000 வழங்குவீர்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்ததே தவறுதான்.
எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தயாராக உள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

