திருச்சி:தமிழ்நாடு பொதுப்பணித்துறைபொறியாளர் சங்க 2 வகு பொதுக்குழு கூட்டம் முடிவில் அரசு அறிவித்துள்ள உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை வரவேற்று வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு 2026 வெளியீட்டு விழா மற்றும் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் பொறியாளர். எஸ்.மணிவண்ணன் தலைமையில்,
சங்க செயலாளர் பொறியாளர் இ.இம்மானுவேல் ஜெயகர் , அனைத்து தலைமை பொறியாளர்கள், திருச்சி கிளை சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திருச்சி அரிஸ்டோர் மேம்பாலம் அருகில் உள்ள ரயில் மஹாலில் இன்று (03.01.2026 ) காலை 10:30 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில் குமார் வரவேற்புரை அளித்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சங்க உறுப்பினர்கள் உடனுக்குடன் துறை விவரங்களை தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக புதிய செயலி வெளியிடப்பட்டது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கீழ்காணும் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
துறை பொறியாளர்களின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கு சிறப்பு பயிற்சிகள் வழங்குதல் மற்றும் தேசிய. சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய கருத்தரங்குகளுக்கும் பயிற்சிகளுக்கும் நமது பொறியாளர்கள் பங்கேற்க அரசிடம் கோரிக்கை வைத்தல்
துறையில் உள்ள மின் மற்றும் ரேடியோ அலகுகள், ஆர்க்கிடெக்ட் அலகு, திட்டம் மற்றும் வடிவமைப்பு அலகு, தரக்கட்டுப்பாட்டு அலகு, கட்டட ஆராய்ச்சி மையம் ஆகிய அலகுகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மேலும் புதிய தொழில்நுட்பங்களை துறையில் புகுத்துவதற்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலகினை உருவாக்க அரசிடம் கோரிக்கை வைத்தல்.
> அரசின் அனைத்து கட்டுமானங்களையும் பொதுப்பணித்துறை மூலமாகவே மேற்கொள்ள வலியுறுத்துதல்.
வருடந்தோறும் புதிய பொறியாளர்களை நியமனம் செய்தல் அனைத்து உதவி செயற் பொறியாளர்களுக்கும் தள ஆய்வு மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக ஈப்பு வழங்க கோரிக்கை வைத்தல்
லேசர் அளவீடு, கட்டுமானத்திற்கு தேவையான சரிபார்ப்பு கருவிகள் மற்றும் கணினி போன்ற தொழில்நுட்ப சாதனங்களை வழங்க கோரிக்கை வைத்தல்,
வட்ட அளவில் புதிய சங்க கிளைகளை உருவாக்குதல்.
நிகழ்ச்சியில் நாள்காட்டி, நாட் குறிப்பு ,உறுப்பினர்களுக்கான புதிய செயலி,பொறியாளர்களுடன் கலந்து உரையாடல் நிகழ்வுக்கு பின் அரியலூர் செயற்பொறியாளர் வெங்கடேசன் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.
நிகழ்வின் முடிவில் தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்,

