Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருடன் உல்லாசமாக இருந்த தவெக மாவட்ட செயலாளர்.

0

'- Advertisement -

மகளிர் அணி நிர்வாகியுடன் தகாத உறவில் இருந்த புகாரில் சிக்கிய தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்தவர் செந்தில்நாதன். இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வீட்டிற்குச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வந்த மகளிர் அணி நிர்வாகியின் குடும்பத்தினர், அரைகுறை ஆடையில் இருந்த செந்தில்நாதனையும், மகளிர் அணி நிர்வாகியையும் பிடித்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதனை நீக்கி அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

கட்சிப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று த வெ க தலைமை எச்சரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்நாதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சிப் பெயரையும், தனது பெயரையும் கெடுப்பதற்காக சிலர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.