Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட வீரர்களை வாழ்த்தி பரிசளித்த தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி பட்டாலியன் கமாண்டன் ஆனந்தன்

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டுவீரர் களுக்கும், சென்ற மாதம் மத்திய அரசின் வீரமங்கைஅஸ்மிதா என்ற தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும், சென்ற மாதம் மாநில அளவிலான போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் வெற்றி பெற்ற வீரர்கள்,ஒடிசா நடந்த தேசிய அளவிலான தடகள போட்டில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற வெற்றி பெற்ற திருச்சி வீரர்களுக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி பட்டாலியன் கமாண்டன் எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வுவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு வந்தவர்களை வரவேற்றார்.

தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீல மேகம், தடகள சங்க துணை செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் லாசர், லட்சுமணன், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், தடகள வீரர்கள் மற்றும் வீராங்களைகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.