பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளராகவும் , திருச்சி மாவட்ட செயலாளராகவும் ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன் பொறுப்பேற்பு .

திருச்சி மாவட்டத்தில் பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளராகவும் , திருச்சி மாவட்ட செயலாளராகவும் ஜெபி என்ற ஜெயராம் பாண்டியனை டாக்டர் இசக்கி ராஜா தேவரின் ஆணைப்படியும் மாநில பொது செயலாளர் வள்ளி கண்ணு அவர்களின் பரிந்துரை படியும் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் இது பற்றி ஜெபி அவர்களிடம் பேசிய போது தமிழ் நாடு முழுவதும் அதிக வாக்கு வங்கி உள்ள ஒரே சமுதாயம் தேவரினம் அவர்களுக்கு தேவையானவை நிறைய இருக்கிறது அதை சரி செய்யவும் சீர் செய்யவும் இந்த இயக்கத்தில் இணைந்ததாகவும் தலைவர் இசக்கி ராஜா தேவர் அவர்கள் ஏற்கனவே தேவர் சமுதாயம் மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தை சேர்ந்த பல தரப்பட்ட மக்களுக்கு PMT அறக்கட்டளை சார்பாக பல உதவிகளை செய்து வந்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு இந்த இயக்கத்தில் இணைந்து மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் நமது திருச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் தலைவர் இசக்கிராஜா தேவரின் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளவும் எனவும் தெரிவித்து உன்னார்.

