Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தரை கடை வியாபாரத்துக்கு அனுமதி கோரி மமக வர்த்தக நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு .

0

'- Advertisement -

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Ad banner

அதில் சலூன் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று தற்போது திருச்சி மலைக்கோட்டை பகுதியில் சுமார் 700 தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததால் அரசு அவர்களுக்கும் அனுமதி வழங்கிட வேண்டுமென்று தரைக்கடை வியாபாரிகள் மற்றும் மனித நேய அனைத்து வர்த்தக நல சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் நிவாரண நிதியாக நடைபாதை வியாபாரிகளுக்கு அரசு வழங்கிய நிதியைப் போல 3000 ரூபாய் கூடுதலாக வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜா முகமது, மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர் அன்வர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.