நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி திரண்டு வந்து வரவேற்ப்பீர் . அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள,
மக்களை காப்போம்..
தமிழகத்தை மீட்போம்.
எழுச்சிமிகு சுற்றுப்பயண நிகழ்விற்கு செல்வதற்காக..
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி
நாளை 29.07.2025 செவ்வாய் கிழமை, காலை 9.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார் .
அது சமயம் நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தைச் சார்ந்த அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் வருகை தந்து அண்ணன் அவர்களை வரவேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

