Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியாா் கல்லூரி மாணவா் நேற்று சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

 

Ad banner

ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (வயது 19). இவா் சமயபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியாா் தங்கும் விடுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

 

இந்நிலையில் தங்கும் விடுதியில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

 

தகவலறிந்து விடுதி வந்த சமயபுரம் காவல் நிலைய போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சமயபுரம் காவல் நிலைய போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக மகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.