Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழா.

0

'- Advertisement -

திருச்சி கல்லுக்குழி

Ad banner

ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழா.

 

வரும் 11- ந் தேதி நடைபெற உள்ளது .

 

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வருகிற 11-ந் தேதி குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடைபெற உள்ளது .

 

சித்திரை 28-ந் தேதி ( 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை) வாக்கிய பஞ்சாங்கப்படி மதியம் 1.19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசி யிலிருந்து மிதுனம் ராசிக்கு பிரவேசிக்கிறார், இதனை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.இதில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழாவையொட்டி 11-ந்தேதி காலை 11 முதல் 12.30 மணி வரை கணபதி ஹோமம், குரு பரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 1.19 மணிக்கு மேல் நவக்கிரகங்கள் அபிஷேகம், ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுந்தரி ,செயல் அலுவலர் சரண்யா,கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.