Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சமயபுரம் சித்திரை தேர் திருவிழா தொடக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.

 

Ad banner

சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும் இந்த கோயில் விளங்கி கொண்டிருக்கிறது..

 

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் மாரியம்மன் வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள்.

இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, 8 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும். இப்படி பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.

 

அந்தவகையில், இந்த வருடத்துக்கான சித்திரை தேர் திருவிழா இன்று ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது. இன்று காலை 10.31 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது.

 

இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று ஏப்ரல் 15 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டத்தில் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இன்று, திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. .. ஆனால், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே 3 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று கலெக்டர் தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்தும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே பக்தர்கள் திருச்சி நோக்கி படையெடுத்து வந்தனர்

 

பக்தர்கள் சிறப்பான முறையில் தரிசனம் செய்யவும் மற்றும் எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்வதற்கான அனைத்து வசதிகளையும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பான முறையில் முன்னேற்பாடு வசதிகள் செய்து இருந்தனர்.

 

திருச்சி மத்திய மண்டலத்திலிருந்து 1 காவல் கண்காணிப்பாளர், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 16 காவல்துறை கண்காணிப்பாளர் 31 காவல் ஆய்வாளர்கள் 1263 காவல் ஆளுநர்கள் மற்றும் 275 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டு, சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர் , அன்னதானம் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.