நாளை திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில். நாளை திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு.
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் நடக்கிறது.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா முன்னிலை வகிக்கிறார்.ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் முகமது ரூஹில் ஹக் ஹஜ்ரத் ரஷாதி வாழ்த்துரை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்படி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.