Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அக்கா,தங்கை, தாயோ இல்ல மகளோ யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள் என்று கூறியவர் பெரியார். சீமான் சர்ச்சை பேச்சு .

0

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் தற்போது சர்ச்சைக்குரிய சபையில் பேசி வருகிறார் .

திருச்சி காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வருண்குமாரை  நீ சாதாரண ஐபிஎஸ் அதிகாரி தான்  எனக்கு கூறியதுடன் அவரது கட்சியினர்  அருண் குமார் குடும்பத்தினரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் ஆவேசம் அடைந்த வருண்குமார்  ஐபிஎஸ் தற்போது திருச்சி கோர்ட்டில் சீமான் மீது திருச்சி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து  அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது .

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெரியார் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது:-

உனக்கு பாலியல் இச்சை வரும்போது அக்காவோ இல்ல தங்கையோ, தாயோ இல்ல மகளோ யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள் என்று கூறியவர் பெரியார்.

மதுவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்த நிலையில் அவர் தோட்டத்தில் இருந்த ஆயிரம் தென்னை மரங்களை வெட்டினார். ஒரு பகுத்தறிவாளர் இப்படி செய்வாரா. என் தோப்பில் கள் எடுக்க அனுமதி கிடையாது என்று சொன்னால் முடிந்து விடும். அதை விட்டுவிட்டு எவனாவது தென்னை மரத்தை வெட்டுவானா.? கள் எடுக்க அனுமதி கிடையாது என்று ‌ அறிவுள்ளவன் கூறுவான்.

அதை விட்டுவிட்டு தென்னை மரத்தை வெட்டுவது ஒரு பகுத்தறிவாளன் ‌ செய்யும் விஷயமா. எந்த நாட்டில் மது இல்லை. உலகில் யார் தான் மது குடிக்காமல் இருக்கிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்று சொல்வது கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று கூறியுள்ளார்.

சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம். இதுதான் பெரியார் பேசிய பெண்ணுரிமையா என்று கேட்டார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தபெதிக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் பெரியார் பற்றி சீமான் சொன்னதற்கு நான் அவருடைய வீட்டிற்க்கே நாளை செல்வேன். மேலும் பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரத்தை அவர் என்னிடம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.