Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல் சமய நல்லுறவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா. தூய திருத்துவ பேராலயத்தில் நடைபெற்றது.

0

'- Advertisement -

Ad banner

பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா திருச்சி மேலப்புதூர் டி.இ.எல்.சி. தூய திருத்துவ பேராலய வளாகத்தில் நடைபெற்றது.

 

இவ்விழாவுக்கு ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற இயக்குனர் சார்லஸ் வரவேற்பு உரை ஆற்றினார் .

 

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், கிறிஸ்து பிறப்பு செய்தி வழங்கினார்.

 

தென்னிந்திய திருச்சபை திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் ஆணை யாளர் சுரேஷ்குமார், பனானா லீப் உணவகங்களின் உரிமையாளர் மனோகரன், ஜமால்முகமது கல்லூரி உதவி பேராசிரியர் ரஷிதாபேகம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

 

திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையுரையாற்றினார்.

 

மரியாவின் பிரான்சிஸ்கன் தூதுரையாளர் சபை-கோவா அருள்சகோதரி ஸ்டெல்லா பல்தார் சிறப்புரையாற்றினார்.

விழாவில் திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், சீக்கியர் நலச்சங்க தலைவர் அச்சர்சிங், பிரம்மகுமாரி தேவகி, ஜனாப்காதர் மீரா, பழந்தமிழ் காவிரி அறக்கட்டளையின் பாலசுப்ரமணியன், சி.எஸ்.ஐ.ஷீலா மார்கரெட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .

முடிவில் டி.இ.எல்.சி. பொருளாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.