Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 96 வயது மூதாட்டி மற்றும் பள்ளி மாணவி மாயம்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில்
96 வயது மூதாட்டி மற்றும் பள்ளி மாணவி மாயம்.

TVK ad

திருச்சி பாலக்கரை
பீமநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா இவரது மகள் பவித்ரா (வயது 14) சம்பவத்தன்று இவர் தனது தோழியின் பிறந்தநாளை ஒட்டி அவரது வீட்டுக்கு சென்றார். பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் வீரம்மாள் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

இதேபோன்று திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர்
பால்பாண்டி. இவரது மனைவி பத்மா சக்தி (வயது 96) இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மகன் முருகேசன் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாசக்தியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.