பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது . ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி.

இப்போோட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.
ஆரம்பம் முதல் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடியது.
ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த நிலையில் மீண்டும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஆடவர் ஹாக்கியில் ஸ்பெயின் அணியை இந்தியா வென்றதன் மூலம் 4வது வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
கடந்த 52 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா அணி தொடர்ந்து இரண்டு முறை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது .

