Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 9, 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் திடீர் மாயம்

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சியில் 9,10ம் வகுப்பு பள்ளி மாணவிகள் மாயம் .

திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் இவரது மகள் பிரேமா (வயது 16) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் அலமு திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோன்று கரூர் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா இவரது மகள் சுமையாபேகம் (வயது 17)இவர் திருச்சி வரகனேரி பஜாரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது தாய் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமையா பேகத்தை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.