திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கலங்கலாக வரும் குடிநீர் . மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு.
திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் – 2 வார்டு எண் -16மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி , கலைஞர் நகர் பகுதிகுடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயர் அன்பழகன் உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் சிவபாதம் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சாலைத் தவவளன் மற்றும் உதவி செயற்பொறியாளர் இளநிலை பொறியாளர் ,
மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்