திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி மதுரை ரோடு பகுதியில் போதை மாத்திரைகளை 2 பேர் விற்றுகொண்டிருப்பதாக கோட்டை போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகளை விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜமீர் பாஷா (வயது 20 )வள்ளுவ நகரை சேர்ந்த காதர் மொய்தீன் (வயது 21)என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு பேரையும் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.