Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் பாராளுமன்ற தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்

0

'- Advertisement -

பாராளுமன்ற பொது தேர்தலில்
நூறு விழுக்காடு வாக்களிக்க
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
விழிப்புணர்வு பேரணி!

Ad banner

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில்
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் முன்பு திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சேர்மன் ராஜசேகரன், கல்லூரி கல்வி துறை இணை இயக்குனர் முனைவர் பொன் முத்துராமன், அய்மான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வாணி, நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன்,
யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ஆலோசகர் வில்லியம் எட்மண்ட், மேலாளர் எழில் ஏழுமலை பால்குணா லோகநாத் ,
செயலாற்று குழு உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலையில் பாராளுமன்ற பொது தேர்தலில் தேர்தலில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உங்கள் வாக்கு உங்கள் குரல் என திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக முன்பிருந்து கேகே நகர் வரை விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.