Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநராட்சி பகுதியில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்…

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் வராது.

TVK ad

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா், கலெக்டா் வெல் நீரேற்று நிலைய, நீா்ப்பணி நிலையப் பராமரிப்புப் பணிகளால் தில்லை நகா், அண்ணா நகா், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், கல்லாங்காடு, தெற்கு ராமலிங்க நகா், ஆல்பா நகா், மிளகுப்பாறை, கருமண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை குடிநீா் வராது.

புதன்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் வரும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைத்து, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.