Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது பைக் மோதி பரிதாப பலி .

0

'- Advertisement -

 

Ad banner
TVK ad

திருச்சி கருமண்டபம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த பழனிச்சாமி படுகாயம் அடைந்தார் .
அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன ஓய்வு பெற்ற அதிகாரி பழனிச்சாமி திருச்சி மாநகராட்சி அதிகாரி வேல்முருகனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.