Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் நாளை பூத் முகவர்கள், மகளிர், பாசறை பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் செம்மலை பங்கேற்பு. தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

TVK ad

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க நாளை (26..10.2023) காலை 10.30 மணிக்கு மணப்பாறை பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அருகில் உள்ள R.V.மஹாலில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பாக வாக்குசாவடி முகவர்கள், மகளிர் குழு. பாசறை குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் .
ப.குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

அதுசமயம் நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக. பகுதி கழக, வார்டு கழக, வட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் வாக்குசாவடி முகவர்கள், மகளிர் குழு. பாசறை குழு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.