எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை தொழிலதிபர் முருகானந்தம் வழங்கினார்.

எக்ஸெல் குழுமங்களின் சார்பில்
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நவீன பேருந்து
தொழிலதிபர் எம். முருகானந்தம் வழங்கினார்.
எக்ஸெல் குழுமங்களின் தலைவராக இருப்பவர் தொழிலதிபர் எம். முருகானந்தம். திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த இவர் ஏற்றுமதி, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் படித்த பின் தங்கிய ஏழை எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைக்கு வழிகாட்டி வருகிறார்.
ஏற்கனவே அடிப்படை வசதிகளில் பின்தங்கிய கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தியுள்ளார்.
இளம் தொழில் அதிபரான முருகானந்தம் தனது ஆரம்ப கல்வியை அரசு பள்ளியில் தொடங்கியவர்.
கல்வி ஒன்றையே அடிப்படையாக கொண்டு சர்வதேச அளவில் எக்ஸெல் டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை திறம்பட நடத்தி இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறார்.
தொழில் அதிபர், கல்வியாளர், சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முக ஆற்றல் கொண்ட
இவரின் மேரிடைம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 10 நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது.
அரசியல் மற்றும் சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட முருகானந்தம் தனது வருவாயில் 25 சதவீதத்தை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யும் உன்னத நோக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி நேஷனல் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக எக்ஸெல் டிராவல்ஸ் மற்றும் எக்ஸெல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் குளு குளு ஏ.சி. வசதியுடன் கூடிய பேருந்தை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் எக்ஸெல் குழுமங்களில் தலைவர் எம். முருகானந்தம் கலந்து கொண்டு அந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்தை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அதனை நேஷனல் கல்லூரி செயலாளர் கே. ரகுநாதன் பெற்றுக் கொன்டார்.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் கே.குமார் தலைமை தாங்கினார்.
இந்த பேருந்து நேஷனல் கல்லூரி முதுகலை உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சி துறை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நவீன வசதிகளுடன் கூடிய குளு குளு பேருந்து
வழங்கிய முருகானந்தத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

