திருச்சியில் தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) ஆணையர் வீர் பிரதாப் சிங். மற்றும் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (17.07.2026) தொடங்கி வைத்தார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங். அவர்கள் மற்றும் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு தங்களது சுய விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். மேலும் 17.07.2026 முதல் 31.07.2026 வரையில் சுயக்கணக்கெடுப்பு இணையதளம் (https://se.census.gov.in ) செயல்பாட்டில் இருக்கும். இதில், பொது மக்கள் மற்றும் அனைத்து மாநகராட்சி பணியாளர்களும் மக்கள் தொகை சுயக்கணக்கெடுப்பினை (Self Enumeration) மேற்கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை சிறப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 1 முதல் 30 வரை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், ஒவ்வொரு வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இப்பணியில் சுமார் 1850 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஆணையர் வீர் பிரதாப் சிங். தெரிவித்து உள்ளார்

