திருச்சி: அனுமதியின்றி பேரணி நடத்திய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட 70 பேர் மீது வழக்கு பதிவு.


திருச்சியில் அனுமதியின்றி பேரணி நடத்திய
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 70 பேர் மீது வழக்கு.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் கடந்த 24ஆம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி அன்று மாலை 4 மணி அளவில் ஓ. பன்னீர்செல்வம் மாநாட்டிற்கு வருகை தரும் பொழுது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து ஓபிஎஸ் அணியினர் பொன்மலை ஜி கார்னர் மாநாடு இடம் வரை ஊர்வலமாக ஓ பன்னீர் செல்வத்தை திறந்தவெனில் அழைத்து வந்தனர்.இதை யடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் முன்னாள் அமைச்சர்,அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் நடராஜன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

