
தொட்டியம் கிழக்கு கார்த்திகை பட்டி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் இவரது மகன் பால்ராஜ் (வயது 26).
இவர் தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை.
இதற்கிடையே பால்ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னரும் நோய் குணமாகவில்லை.
அவ்வப்போது வலிக்கு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வயிற்று வலி அவரை வாட்டியது. இதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் சேலையில் பேன் கொக்கியில் தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

