Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உறையூரில் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

உறையூர் குறத்தெருவில்

ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

TVK ad

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போன்று தமிழக அரசு செயலியை உருவாக்க வேண்டும்,
60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,
மானிய விலையில் பெட்ரோல், டீசல்,கேஸ் வழங்கிட வேண்டும். காவல்துறை ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெருவில் மாவட்ட தலைவர் நடராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் கவுன்சிலருமான சுரேஷ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர்
அன்சர்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துரைராஜ், சுரேஷ் முத்துசாமி, ஆட்டோ முருகன், அசோக் முகமது, முஸ்தபா, ராஜ், ராமமூர்த்தி, ஜெயபால், ரமேஷ், ராஜா,பாலசுப்ரமணியம் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.