Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:கேபிள் நிறுவன ஊழியரை அருவாளால் வெட்டி பணம் பறிப்பு. 4ரவுடிகள் மீது வழக்கு பதிவு.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தனியார் கேபிள் நிறுவன ஊழியரை அருவாளால் வெட்டி பணம் பறிப்பு .

TVK ad

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று திருச்சி சங்கிலியாண்டபுரம் காசியாபிள்ளை காலனி வாட்டர் டேங்க் எதிரில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை மிரட்டி அரிவாளால் தாக்கி, இவரிடம் இருந்த 4200 ரூபாய் பணத்தை பறித்து சென்று விட்டனர்.

இதில் காயமடைந்த சேதுபதி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் திருச்சி
சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த இளையராஜா, எதுமலை உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் இளையராஜா எதுமலை ஆகிய இரண்டு பேரும் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.