Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒன்றுபட்டு அதிமுகவை மேலும் வலுப்படுத்துவோம்.கவுன்சிலர் அரவிந்தன் பேட்டி.

0

'- Advertisement -

 

Ad banner

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் ஒன்று கூடி திருச்சி தெப்பக்குளம் அருகே பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

TVK ad

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்தன் கூறினார்:
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , புரட்சித்தலைவி அம்மா ஆசியுடன் இந்த வெற்றி கிடைத்துள்ளது.


கழக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு இந்த வெற்றி மகத்தான வெற்றி ஆகும்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை தொண்டர்களாகிய நாங்கள் வரவேற்கிறோம்.

எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒன்றுபட்டு இந்த கட்சியை வலுப்படுத்துவோம்.

வருகின்ற பாராளுமன்ற 2024 தேர்தலில் 40க்கு 40 வென்றெடுத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.