Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மீண்டும் அதிகரித்துவரும் கொரோனா தொற்று. டீன் நேரு பேட்டி.

0

'- Advertisement -

 

திருச்சி அரசு மருத்துவமனையில்
5 குழந்தைகள் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் அனுமதி.

3 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை.

திருச்சி அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு 18 குழந்தைகள் உட்பட 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் 5 குழந்தைகள் பிராண வாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், திருச்சி அரசு மருத்துவமனையில்குழந்தைகள் பெரியவர்கள் கர்ப்பிணிகளுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் தொடர்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில் நுட்பராக பணியாற்றி வரும் லதா(வயது38), கோவா சென்று திரும்பிய மதிவாணன் (வயது42), வெளிநாட்டில் இருந்து வந்த ஹட்சன் ஆகிய மூன்று பேருக்கும் ஏ சிம்டமேட்டிக் அறிகுறிகளுடன் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.