Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி. இருவர் படுகாயம்.

0

'- Advertisement -

 

Ad banner
TVK ad

திருச்சி மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு.

திருச்சி கே.கே.நகர் சாத்தனூர் கோல்டன் அவென்யு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமியின் மகன் ஜெயபால் (வயது 19). நேற்று இரவு இவர், தனது நண்பர்கள் பழனிசாமி(19), சக்திவேல்(19) ஆகியோருடன் ஓலையூர் ரிங்ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் சுயநினைவின்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.