Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்க செயற்குழு கூட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

தமிழ்நாடு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் , பொருளாளர் சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது.

நிறுவனத் தலைவர் செல்வமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் சத்தியநாதன், கணேஷ், சசிகுமார், ராஜேந்திரன், செந்தில் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும், அரசு ஒதுக்கீடு 7 1/2 சதவீதத்தில் அரசு பாலிடெக் மாணவர்களை சேர்க்க வேண்டும்,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குபள்ளியில் மாற்றுச் சான்றிதழ் உடனே வழங்க வேண்டும்,

மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கு காட்சி ஊடகத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்,
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்வி கட்டண உதவித் தொகையை முன்பு இருந்தது போல் கல்வி நிர்வாகத்தின் மூலமாகவே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.