Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி மாபெரும் நலத்திட்டம்+அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.இளைஞர் அணி முத்துக்குமார் சிறப்பான ஏற்பாடு.

0

'- Advertisement -

 

திருச்சியில் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும்
அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று நடைபெற்றது.

மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் தலைமை தாங்கினார் .

பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா வரவேற்றார். விழாவில் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி, அமைப்புச்செயலாளர் ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவபதி,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை வழங்கினர்.

இந்தநிகழ்வில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், பகுதி செயலாளர்
ஏர்போர்ட் விஜி, அன்பழகன், நாகநாதர் பாண்டி,இன்ஜினியர் ராஜா, வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், கன்னியப்பன்,
கவுன்சிலர் அம்பிகாபதி, கருமண்டபம் பகுதி
டி ஆர் சுரேஷ் குமார்
வண்ணார்பேட்டை ராஜன், ரவீந்திரன்,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட செயலாளர் கயிலை கோபி நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருச்சியில் எந்த கட்சியினரும் இதுவரை வழங்காத வகையில் நல்ல மதிப்புள்ள குடும்பத்தினருக்கு உபயோகப்படும் வகையில் சில்வர் பாத்திரங்கள்.ஹாட்பேக் டிபன் பாக்ஸ்கள் வழங்கப்பட்டது.


இதே போல் சிக்கன் பிரியாணி, முட்டை என பொதுமக்களுக்கும் தரமான உணவும் வழங்கப்பட்டது என பயனாளிகளும், பொதுமக்களும் கூறி முத்துக்குமாரை வாழ்த்தி சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.