Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிஐடியினர் கோரிக்கை.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர் மாநகராட்சி நிர்வாகத்தினர்.

Ad banner

இந்நிலையில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாமல் சாலையின் சென்டர் மீடியத்தில் ஓரத்தில் உள்ள மணலை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் இரண்டு பெண்கள் (செல்வி, குணசுந்தரி) ஒரு ஆண் (மாரியப்பன்) உட்பட மூன்று பேர் மீது அந்த வழியாக வந்த கார் மாநகராட்சியினுடைய பேட்டரி வாகனத்தில் மீது மோதியதில் மூவருக்கும் அடிப்பட்டது

அதில் கடினமான காயமுற்ற மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TVK ad

தொடர்ச்சியாக மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபடுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

விபத்தில் பாதிக்கப்பட்ட மூவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் அவர்களது பாதிப்புக்கு ஏற்றவாறு உரிய நிவாரணத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்.

பாதுகாப்பு குறைவாக வேலையில் ஈடுபடுத்திய மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

( CITU)திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.