Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய மென்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கும் முகாம் திருச்சி எஸ் பி ஐ ஓ ஏ பள்ளியில் நடைபெற்றது..

0

'- Advertisement -

 

Ad banner

தமிழ்நாடு மென்பந்து சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட மென்பந்து
(softball) சங்கம் இணைந்து நடத்தும் மிக இளையோர் பிரிவில் மாணவ மாணவியருக்கான தேசிய மென்பந்து போட்டியானது நவம்பர் 25 முதல் 29 வரை ஆந்திர பிரதேசத்தில் நடைபெற உள்ளது.

அதற்கான பயிற்சி முகாமைத் திருச்சி, எஸ். பி. ஐ. ஓ. ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் கணபதி சுப்ரமணியன் மற்றும் பள்ளியின் முதல்வர் (பொறுப்பு) முத்துராஜன் மற்றும் திருச்சி மாவட்ட மின் பந்து சங்க தலைவர் D
வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இம்முகாமானது பள்ளி வளாகத்தில் நவம்பர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் 25ஆம் தேதி ஆந்திராவில் நடைபெற உள்ள தேசிய மென் பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.