Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடந்தது.

Ad banner

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம்களில் கழக நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், நடராஜன், முத்துக்கருப்பன், Lஜெயக்குமார், ஆமூர் ஜெயராமன், ஆதாளி, ராஜமாணிக்கம், ஜெயக்குமார் பால்மணி, பிரகாசவேல், ஜெயம் குமரவேல், சேனை செல்வம் அழகாபுரி செல்வராஜ், வெங்கடேசன், ராம்மோகன், நகர கழக செயலாளர்கள் அமைதி பாலு, சுப்பிரமணியன் பேரூராட்சி கழக செயலாளர்கள் சம்பத், துரை சக்திவேல், செந்தில் குமார், திருஞானம், ராமச்சந்திரன், சுப்ரமணியன், கிட்டு, ராஜேந்திரன், ராஜாங்கம், பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி, சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், பேரூர் கண்ணதாசன், பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநாவுக்கரசுப மற்றும் ஶ்ரீரங்கம் ரவிசங்கர், ஏகாம்பரம் வட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் அதிமுகவினர் சிறப்பாக செயல்பட வேண்டும்,
வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம், பண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும்பணிகளை முனைப்புடன் செய்ய வேண்டும்.
கழகத்தின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி எடப்பாடி தலைமையில் அமைய பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.