Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை

0

'- Advertisement -

Ad banner

*தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை*

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

TVK ad

சமீபநாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், புதுவை,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.