ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது .
திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24) இவர் திருவனைக்காவல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு பிரியாணி விற்றுக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த திருவரங்கம் கும்படம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கார்த்திக்கிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இது குறித்து கார்த்திக் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற ராமச்சந்திரனை கைது செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் மீது திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.