திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகிலேயே புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 to 11 மனமகிழ் மன்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி, 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு இது போன்ற மனமகிழ் மன்றங்களை திறக்கிறதா தமிழக வெற்றிக் கழக அரசு

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகிலேயே புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 to 11 மனமகிழ் மன்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி, 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு இது போன்ற மனமகிழ் மன்றங்களை திறக்கிறதா தமிழக வெற்றிக் கழக அரசு
தவெக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் (500 மீட்டர் சுற்றளவுக்குள்) அமைந்திருந்ததன் அடிப்படையில் 717 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.
பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் தழுவிய ஆய்வுகள் மற்றும் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த குறிப்பிட்ட கடைகள் அடையாளம் காணப்பட்டு
அகற்றப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள்
• வழிபாட்டுத் தலங்கள்: கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 276 கடைகள்.
• கல்வி நிறுவனங்கள்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மிக அருகில் செயல்பட்டு வந்த 186 கடைகள்.
• பேருந்து நிலையங்கள்: பொதுப் போக்குவரத்து மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அச்சுறுத்தலாக இருந்த 255 கடைகள்.
அரசாணை எண் 129-ன் கீழ், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த 717 டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைக்கப்பட்டிருந்த பார்களும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டு மூடப்பட்டுள்ளது.
ஆனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரில் கடந்த 10 நாட்கள் முன் FL2 என்னும் மனமகிழ் மன்றம் (11 to 11 ) தொடங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ….
இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வகைகள் வழங்கப்படும் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது ஆனால் அனைவருக்கும் மது வாங்கி செல்கின்றனர் ,பேரளவுக்கு சிறிய கேரம் போர்டு ஒன்று வைத்துள்ளனர் …
கலெக்டர் ஆபீஸ் சாலை (Collector Office Road) நகரின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான ஒரு சாலையாகும் …கலெக்டர் ஆபீஸ் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பல முக்கிய மாவட்டத் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன .
தற்போது கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தமிழன் உணவு சாலை என்ற ஓட்டலில் முதல் மாடியில் FL 2 மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது (இந்த ஓட்டலில் ஏற்கனவே நான்காவது மாடியில் ஏசி பார் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த மனமகிழ் மன்றம் செயல்பட்டு வரும் இடத்திற்கும் செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிக்கும் 500 அடி தூரம் கூட இல்லை,இது போல் மிளகுபாறை பாரம்பரியமிக்க கருப்பு கோயில் 200 அடி தூரம் கூட கிடையாது ,இதன் அடுத்த காம்பவுண்ட் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் செயல்படுகிறது,திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருபவர்கள் இறங்க வேண்டிய பேருந்து நிலையம் இந்த மனமகிழ் மன்ற வாசலில்தான், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் (பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என ) வந்து செல்லும் இடத்தில் இந்த மனமகிழ் மன்றத்திற்கு தமிழக வெற்றிக்கழக அரசு எப்படி அனுமதி அளித்தது,இந்த தமிழன் உணவு சாலை என்ற மனமகிழ் மன்றம் வழியாகத்தான் திருச்சி மாவட்ட ஆட்சி சென்று வருகிறார், அவரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழ்நாடு வாணிபக் கழக திருச்சி மண்டல டாஸ்மாக் அலுவலரும் இதன் வழியாக தான் தினமும் வந்து செல்கிறார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள 717 கடைகளை அகற்றிய தமிழக வெற்றிக் கழக அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகம் வாயிலில் புதிய மனமகிழ் மன்றம் தொடங்க அனுமதி அளித்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் …

