இன்று ஆடிப்பெருக்கு காவிரி கரைகளில் குவிந்த பொதுமக்கள். தண்ணீர் இல்லாததால் காவிரி ஆற்று மணலில் பூஜை நடத்தினர்

இன்று ஆடிப்பெருக்கு காவிரி கரைகளில் குவிந்த பொதுமக்கள். தண்ணீர் இல்லாததால் காவிரி ஆற்று மணலில் பூஜை நடத்தினர்
புதுமண பெண்கள், சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி 18-ம் விழா இன்று காலை முதல் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் புதுமண தம்பதியினர் மஞ்சக் கயிறு உள்ளிட்ட பொருட்களைக் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
ஆடி மாதம் என்பது பெரும்பாலும் பருவமழை பெய்யும் காலமாகும். அதனால் நன்கு மழை பெய்து, ஆறுகள், குளங்களில் நீர் பெருகி வர வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நீர் நிலைகளை வழிபடும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அதே போல் மக்கள் நீர் நிலைகளின் கரைகளில் ஒன்று கூடி, படையலிட்டு, நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து வழிபடும், சமூக ஒற்றுமையை வளர்க்கும் நாளாகவும் ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் இயற்கையோடு சேர்ந்ததாக இருந்தது. அதனால் இயற்கையை வழிபடும் வழக்கம் பண்டிய காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தைப்பொங்கல் அன்று சூரியனை வழிபடுவதை போல், ஆடிப்பெருக்கு அன்று காவிரி போன்ற நதிகளை மக்கள் வழிபட்டு, நன்றி தெரிவிக்கின்றனர். காவிரி படித் துறைகளில் வாழை இலையில் படையல்யிட்டு புதுமண தம்பதியினர்,திருமணமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக்கெரண்டு காவிரி தாயை வணங்குவது வழக்கமாகும்


இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வரும் சூழ்நிலை ஒரு புறம் இருக்க தமிழகத்தில் எல்நினோ பருவ நிலை மாற்றம் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆறு இன்று பாலைவனமாக எங்கு பார்த்தாலும் மணல் திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
இதனால்
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்புகிறது.
இந்நிலையில் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 25 ஆயிரம் கன அடி நீர் இன்று தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகமாக 27 ஆயிரம் கன அடி தண்ணீர் விடப்பட்டுள்ளது.
இது ஆறுதலான விஷயமாக இருந்தாலும்
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இருந்த போதிலும்
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது தொடர்பாக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தனர்.
பிரதான படித்துறையாக உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நான்கு இடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. குடிநீருக்காக மூன்று இடங்களில் 18 குழாய்கள் அமைக்கப்பட்டு 5 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அம்மா மண்டபம் படித்துறை முதல் புதுத்தெரு வரையில் சாலையோரம் சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக்கரையில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள், பெண்கள், புதுமண தம்பதியினர் ஏராளமானவர்கள் குவிய தொடங்கினர். அதிகாலையில் வீட்டில் குளித்து விட்டு புது ஆடை அணிந்து ஏராளமானவர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு திரண்டு வந்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக காட்சி அளித்ததை பார்த்து அனைவரும் கவலைப்பட்டனர். மேலும் படித்துறையில் தண்ணீர் இல்லாத காரணத்தால்
பெண்கள் இந்த முறை காவிரி ஆற்றுக்குள் இறங்கி மணல் பரப்பில் நடந்து சென்றனர்.
காவிரி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மணலில் வாழை இலை விரித்து
படையல்யிட்டு காவிரி தாயை வணங்கி பூஜை செய்தனர்.
காவிரி மணல் பரப்பில் நின்று கொண்டு பெண்கள் தலைவாழை இலை போட்டு காவிரித் தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் வைத்து படையலிட்டு,
காவிரி தாயை வணங்கினார்கள். பிறகு கற்பூர தீபம் காட்டி வழிபடுட்டனர்.
அப்பொழுது பெண்கள், திருமண தம்பதியினர், ஆண்கள் பயபக்தியுடன் காவிரி தாயை மனதில் நினைத்து வணங்கினர்.
அப்பொழுது அவர்களுடன் சின்ன குழந்தைகள் ஏராளமானவர்கள் வருகை புரிந்து இருந்தனர். அவர்கள் ஆற்று மணலில் மணல் கோட்டை கட்டி விளையாடினார்கள்.
இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்து ரசித்தனர்.
இன்று காலை முதலே அம்மா மண்டப படித்துறைக்கு வந்த புதுமண தம்பதியினர் ஜோடியுடன் வந்து காவிரி தாயை வணங்கி பூஜை செய்து புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர். இதேபோன்று திருமணம் ஆன சுமங்கலிகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள் காவிரி தாயை நினைத்து மஞ்சள் கயிறு புதிதாக அணிந்து கொண்டார்கள்.
வயதில் மூத்த பெண்கள், இளம் வயது பெண்களுக்கு மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டி விட்டனர்.இதேபோன்று புது பெண்ணுகளுக்கு மாப்பிள்ளை மஞ்சள் கயிறு கட்டினார். புதிதாக திருமணமான தம்பதியினர் தங்கள் திருமணத்தின் போது கழுத்தில் போட்ட மாலையை எடுத்து வந்து ஜோடியாக மணல் ஓரத்தில் ஓடை போல உள்ள நீரில் விட்டனர்.
அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் முழுவதும் தண்ணீர் இல்லததால் பெண்கள் படித் துறையில் படையல் இட்டு காவிரி தாயை வணங்கி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரம் செல்ல செல்ல அதிகமாக கூட்டம் காணப்பட்டதால் திருடர்களை கண்டுபிடிக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அம்மா மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் உஷாருடன் இருக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் இன்று மாலை காவிரி படித்துறையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால்
ராட்சத மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கொம்பு :-
ஆடிப்பெருக்கை
முன்னிட்டு முக்கொம்பு சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பெண்கள்,புதுமண தம்பதியினரின் எண்ணிக்கை கூட்டம் அதிகமாக காணப்பட்டது .
அங்கு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால்
மணலில் இறங்கி நடுப் பகுதிக்கு சென்று காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிப்பட்டனர்.
மேலும் முக்கொம்பூரில் கூட்டத்தை சமாளிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் இல்லையென்றாலும் டெல்டாவில் ஆடிப்பெருக்கு களைக்கட்டியது .

