திருச்சி நத்தர்ஷாப்பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்பு..
திருச்சி பாலக்கரை நத்தர்ஷாபள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் பங்கேற்பு..
திருச்சி பாலக்கரை நத்தர்ஷாப்பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியினை பகுதி செயலாளர் இலியாஸ் ஏற்பாடு செய்து இருந்தார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவி சேர்மன்மான சி. கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் ரகமதுல்லா, முஸ்தபா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாவட்ட துணைச் செயலாளர் வெல்ல மண்டி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் அப்பாக்குட்டி, பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, வசந்தம் செல்வமணி, பாபு, கமலஹாசன் முத்தையா முத்துக்குமார் ஜான் எட்வர்ட் அணிச் செயலாளர்கள் சரவணகுமார், பாலா,நத்தர்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

