Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எ.புதூரில் பகுதி செயலாளர் செல்வமணி தலைமையில் நடைபெற்ற கபடி போட்டி திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

.

Ad banner

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் ….

வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் கருமாரியம்மன் கோவில் அருகில் உள்ள திடலில் பள்ளி சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.போட்டியை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு

எடமலைப்பட்டி புதூர் பகுதி அதிமுக செயலாளர் வசந்தம் DSM செல்வமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மார்க்கெட் கே டி. தங்கராஜ், கவுன்சிலர் அம்பிகாபதி மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா எடத்தெரு பாபு கமலஹாசன், முத்துக்குமார், செல்லப்பா, ராஜ்மோகன், சரவணன், வட்ட செயலாளர்கள் துரைசாமி, சார்லஸ் , சுரேஷ் மற்றும் வசந்தகுமார், காஜா பேட்டை சரவணன், அருணாச்சலம், எ.புதூர் சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை வரை போட்டிகள் நடைபெறுகிறது.46 கிலோ எடை உள்ள பள்ளி சிறுவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். திருச்சி, தஞ்சை,சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டது. போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.